2011-ல CSK-க்கு எதிரா கம்பீர் போட்ட ப்ளான்.. 11 வருசத்துக்கு அப்புறம் அதே ப்ளேனை அப்ளை பண்ணி MI-ஐ வீழ்த்திய ரிஷப் பந்த்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து டெல்லி அணி பிளேயிங் லெவன் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 2-வது லீக் போட்டி நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷ்ன் 81 ரன்களும், ரோகித் சர்மா 41 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியை பொறுத்தவரை குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 18.2 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லலித் யாதவ் 48 ரன்களும், அக்சர் பட்டேல் மற்றும் ப்ரீத்தி ஷா ஆகியோர் தலா 38 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் தோல்வி பெற்றதன் மூலம் தொடர்ந்து 10-வது ஆண்டாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி பெற்ற அணி என்ற மோசமான சாதனையை மும்பை படைத்துள்ளது.
அதேபோல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி ப்ளேயிங் லெவனில் 2 வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியிருந்தும் நியூசிலாந்தின் டிம் ஷைபர்ட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் போவெல் ஆகிய 2 வீரர்கள் மட்டுமே டெல்லி அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தனர்.
ஐபிஎல் வரலாற்றில் இதுபோல் 2 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வது இதுதான் 2-வது முறை. கடந்த 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது, கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வீரர் ஜேக் காலிஸ் மற்றும் இங்கிலாந்து வீரர் இயன் மோர்கன் ஆகிய 2 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பயன்படுத்தியது.
அதன்பின் 11 வருடங்கள் கழித்து டெல்லி அணி அதுபோன்ற உத்தியை கையாண்டுள்ளது. அப்போட்டியில் சிஎஸ்கே அணியிடம் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. ஆனால் 2 வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு மும்பை அணியை டெல்லி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்