‘யாரு சாமி நீ’!.. ஐபிஎல் ‘வரலாற்றிலேயே’ இதுதான் முதல்முறை.. மிரள வைத்த வீரரின் சாதனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டி இன்று (14.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

‘யாரு சாமி நீ’!.. ஐபிஎல் ‘வரலாற்றிலேயே’ இதுதான் முதல்முறை.. மிரள வைத்த வீரரின் சாதனை..!

இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகார் தவான் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்தநிலையில் இப்போட்டியின் 3-வது ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை அன்ரிச் 156.2 கிமீ வேகத்தில் வீசினார். ஐபிஎல் வரலாற்றிலேயே இவ்வளவு வேகமாக பந்து வீசப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பந்தை எதிர்கொண்ட பட்லர் அதை பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்தே பட்லர் போல்ட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

DC Anrich Nortje bowls fastest delivery in IPL history

மற்ற செய்திகள்