"எனக்கு கேப்டன் பதவியே வேண்டாம்.. அதைவிட குடும்பம் முக்கியம்".. ஆஸி . கிரிக்கெட் வாரியம் மீது வார்னர் கடும் தாக்கு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள அறிக்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி நடந்த போது பந்தை சேதப்படுத்தியது நிரூபிக்கப்பட்டதன் காரணமாக டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட 3 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு 1 வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், வார்னருக்கு வாழ்நாள் கேப்டன்ஷிப் தடையும் விதிக்கப்பட்டிருந்தது
முன்னதாக கேப்டன்சி பதவிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தான் கேட்டுக்கொண்டதாக வார்னர் தெரிவித்திருந்தார். இருப்பினும் 9 மாத காலமாக ஆஸி. கிரிக்கெட் வாரியம் இதுபற்றி மவுனம் காத்து வருவதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் கேப்டன்சி தடை குறித்து மறுவிசாரணை செய்ய விண்ணப்பித்திருந்தார் வார்னர். இதனிடையே இன்று வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் விசாரணை குழுவில் இருந்த ஆலோசர் தன்னை பற்றி மோசமான விமர்சனங்களை முன்வைத்தாக வார்னர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தனது குடும்பத்தை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மறு விசாரணை குழுவில் உள்ள ஆலோசகர் நடந்து முடிந்த சம்பவம் பற்றியே மறுபரிசீலனை செய்து வருவதாகவும் இது தன்னையும் தனது குடும்பத்தினரையும் கடுமையாக பாதிப்பதாகவும் வார்னர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மேலும், தடை விதிக்கப்பட்ட ஆண்டுகளில் தனது குடும்பத்தினர் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், மறு விசாரணை முறையை சாடியுள்ள வார்னர் தனது வாழ்நாள் தடை மீதான விசாரணை விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் கிரிக்கெட்டை விட தனக்கு தனது குடும்பமே முக்கியம் எனவும் வார்னர் தெரிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
Also Read | சபரிமலையில் விஐபி தரிசன விவகாரம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த அதிரடி உத்தரவு..!
மற்ற செய்திகள்