'ஆச்சரியம், முட்டல், மோதல் இல்லை’... ‘மொத்தமாக எல்லாம் மாறிப் போச்சு’... ‘வார்னரின் செயலை பாராட்டிய நெட்டிசன்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது, டேவிட் வார்னர், ஹர்திக் பாண்டியா இடையே நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரின் முடிவில் 374 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர்.
375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.
இந்நிலையில் போட்டியின் போது, டேவிட் வார்னர், ஹர்திக் பாண்டியா இடையே நடைபெற்ற சம்பவம் வைரல் ஆகியுள்ளது. ஆட்டத்தின் 32-ஆவது ஓவரின் போது, 214 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்ததையடுத்து, தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா களத்தில் நின்றனர். அப்போது, ஹர்திக் பாண்டியா கால் ஷூ லேஸ் கழண்டு தடுமாற, அதைப் பார்த்த வார்னர், ஹர்திக் பாண்டியாவின் அருகே அமர்ந்து, ஷூ லேசைக் கட்டிவிட்டார். பின்னர் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா கைகளால், பன்ஞ்ச் பண்ணிவிட்டார்.
பொதுவாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே, களத்தில் வார்த்தை மோதல்களும், உரசல்களும் அதிகமாக இருக்கும். ஆனால், இன்றைய போட்டியின் போது வார்னர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து, பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். மொத்தத்தில் வேறு அணியாக களத்தில் மாறி நிற்கும் ஆஸ்திரேலிய அணியைப் பார் என ரசிகர்கள் செய்துவரும் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஐசிசியும் ஸ்பிரிட் ஆஃப் கேம் என்று பாராட்டியுள்ளது.
Spirit of cricket 🤜 🤛 #AUSvINDpic.twitter.com/V3ySz9go89
— ICC (@ICC) November 27, 2020
Over, under, in and out; that's what shoe-tying's all about #AUSvIND pic.twitter.com/q9AOqSaT86
— cricket.com.au (@cricketcomau) November 27, 2020
மற்ற செய்திகள்