RRR Others USA

சந்தேகம் தான்.. 'சன் ரைசர்ஸ்' அணியை சீண்டிய டேவிட் வார்னர்.. வைரல் ட்வீட்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் அதன் பயிற்சியாளர் ஆகியோரை குறிப்பிட்டு டேவிட் வார்னர் கிண்டலாக செய்த ட்வீட் ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.

சந்தேகம் தான்.. 'சன் ரைசர்ஸ்' அணியை சீண்டிய டேவிட் வார்னர்.. வைரல் ட்வீட்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இந்த மூன்று போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டு, தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், சிறப்பான ஆட்டத்தை தொடர் முழுக்க வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் சோகம்

அவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் துவண்டு போன வார்னர், மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து விட்டதையும் குறிப்பிடுகின்றனர். இந்தாண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடியிருந்தார் டேவிட் வார்னர். முதல் பாதியில், ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத்தினால், கேப்டனாக இருந்த வார்னரை, அப்பதவியில் இருந்து நீக்கி, புதிய கேப்டனாக வில்லியம்சனை நியமித்தது ஹைதராபாத் அணி.

வார்னர் புறக்கணிப்பு

பின்னர், போட்டிகளில் கூட வார்னரை களமிறக்காமல், புறக்கணித்தது ஹைதராபாத் அணி. கேப்டன் மாறிய நிலையிலும், ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தான் பிடித்திருந்தது. அந்த அணி கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். அப்படிப்பட்ட வீரரை, அணியில் இருந்து ஒதுக்கியது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வெளியேற்றம்

இதன் காரணமாக, ரசிகர்கள் அனைவரும் வார்னருக்கு முழு ஆதரவையும் அளித்திருந்தனர். மேலும், அடுத்த ஐபிஎல் சீசன் காரணமாக, அனைத்து ஐபிஎல் அணிகள், விதிகளுக்கு உட்பட்டு, அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதன்படி, ஹைதராபாத் அணி, வார்னரை தக்க வைத்துக் கொள்ளாமல் வெளியேற்றியது.

வார்னர் கிண்டல்

இந்நிலையில், வார்னர் ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்திற்கு ஆடி வருகிறார். இதனால், சிறந்த அதிரடி வீரரை ஹைதராபாத் அணி தவற விட்டது என்பது போன்ற கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இதனிடையே, ஹைதராபாத் அணி மற்றும் அதன் பயிற்சியாளரை கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார் வார்னர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி, ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றியைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டில், ரசிகர் ஒருவர், 'வரவிருக்கும் ஐபிஎல் ஏலம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பாக அமையுமா?' என கேட்டிருந்தார்.

 

சந்தேகம் தான்

கடந்த சீசன் போல இல்லாமல், இந்த முறை சிறப்பான வீரர்கள் அமைய வேண்டும் என்பதைத் தான் ரசிகர் அப்படி குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த டேவிட் வார்னர், 'சந்தேகம் தான்' என குறிப்பிட்டார். அதாவது, சன் ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் ஏலம் சிறந்த முறையில் அமையாது என்பது போன்ற ஒரு பதிலை வார்னர் குறிப்பிட்டுள்ளார்.

 

வாழ்த்துக்கள் வார்னர்

ஹைதராபாத் அணியை மறைமுகமாக கிண்டலடித்த டேவிட் வார்னரின் பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலானது. தொடர்ந்து, வார்னரின் கருத்துக்கு பதிலளித்த சன் ரைசர்ஸ் ட்விட்டர் பக்கம், 'ஆஷஸ் வெற்றிக்கு வாழ்த்துக்கள் வார்னர். நீங்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பதாக தெரிகிறது. பார்ட்டியையும் கொண்டாடி வருகிறீர்கள். மறுபுறம், உங்களுக்கும் ஐபிஎல் ஏலம் சிறந்ததாக அமையும் என நம்புகிறோம்' என குறிப்பிட்டுள்ளது.

 

DAVID WARNER, SRH, TOM MOODY, IPL 2022, டேவிட் வார்னர், டாம் மூடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

மற்ற செய்திகள்