வெற்றியோ, தோல்வியோ இந்த ‘பாசம்’ மட்டும் எப்பவும் மாறாது.. வரவேற்பை பெற்ற வார்னரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பாராட்டு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சிக்சர், பவுண்டரி என விளாசினர். இதனால் 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பையை முதல்முறையாக வென்று ஆஸ்திரேலிய அணி வரலாறு படைத்தது.
இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு (David Warner) ‘தொடர் நாயகன்’ விருது வழங்கப்பட்டது.
David Warner's Instagram story. Said "My man You legend, Kane Williamson". Showed Mutual respect between these two. pic.twitter.com/CnfVDws66c
— CricketMAN2 (@man4_cricket) November 15, 2021
இந்த நிலையில், டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை ‘லெஜண்ட்’ என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இருவரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்