"முடிஞ்சா இந்த 'record'அ பிரேக் பண்ணுங்க பாக்கலாம்..." 'வார்னர்' செஞ்ச வேற லெவல் 'சம்பவம்'!!,.. "முறியடிக்க ஒரு யுகமே தேவைப்படும் போல..."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

"முடிஞ்சா இந்த 'record'அ பிரேக் பண்ணுங்க பாக்கலாம்..." 'வார்னர்' செஞ்ச வேற லெவல் 'சம்பவம்'!!,.. "முறியடிக்க ஒரு யுகமே தேவைப்படும் போல..."

நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 85 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்து அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதன் காரணமாக, தொடர்ச்சியாக 6 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

 

ஹைதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அணியின் வெற்றிக்கும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். ஐபிஎலில் மிகவும் மகத்தான சாதனை ஒன்றை செய்துள்ள வார்னருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் அதிகம் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்