சீண்ட பார்த்த இளம் பாகிஸ்தான் வீரர்.. "அங்கிட்டு போங்க தம்பி.." செம கூலாக வார்னர் கொடுத்த பதிலடி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி 20 போட்டியில் ஆடவுள்ளது.

சீண்ட பார்த்த இளம் பாகிஸ்தான் வீரர்.. "அங்கிட்டு போங்க தம்பி.." செம கூலாக வார்னர் கொடுத்த பதிலடி..

இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம், தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது. அதிகபட்சமாக அசார் அலி 185 ரன்களும், இமாம் உல் ஹக் 157 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி, 400 ரன்களைக் கடந்து பேட்டிங் செய்து வருகிறது. நான்காம் நாள் ஆட்டம் என்பதால், போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

டேவிட் வார்னர் - கவாஜா

இதனிடையே, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் செய்த செயல் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர், 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, 97 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

வார்னரின் அணுகுமுறை

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தனர். பொதுவாக, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் எதிரணி வீரர்களிடம் வார்த்தை போரில் ஈடுபடுவார்கள். அதிலும் குறிப்பாக, வார்னர் அதிக அளவிலான போட்டிகளில் எதிரணி வீரர்களை சீண்டி பார்ப்பார்.

நசீம் ஷா

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மிகவும் எளிமையாக சிரித்து கொண்டே கடந்து சென்றார் வார்னர். அதிலும், பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, வார்னருக்கு சில ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை வீசிக் கொண்டிருந்தார். அதில் ஒரு பந்து, வார்னேரின் தேகத்தில் பட்டது. இப்படி சில பந்துகளின் போது வார்னரை நசீம் முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

பல்பு கொடுத்த வார்னர்

அப்படி ஒரு வேளையில், நசீம் ஷா வார்னரிடம் ஏதோ பேசி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். பழைய வார்னராக இருந்திருந்தால், நிச்சயம் திரும்பி ஏதாவது பேசியிருப்பார். ஆனால், இந்த வார்னரோ, நசீம் ஷா அருகே சென்று, அவரைத் தட்டிக் கொடுத்து விட்டு, சிரித்தே அனுப்பி வைத்தார்.

வார்னரின் இந்த அணுகுமுறை, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

DAVID WARNER, NASEEM SHAH, USMAN KHAWAJA, AUS VS PAK

மற்ற செய்திகள்