‘தூங்குறதுக்கு முன்னாடி பேட்டை செக் பண்ணுவாரு’!.. ஸ்மித்துக்கு இருக்கும் ‘விநோத’ பழக்கம்.. சீக்ரெட் உடைத்த வார்னர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இருக்கும் விநோதமான பழக்கம் குறித்து டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.

‘தூங்குறதுக்கு முன்னாடி பேட்டை செக் பண்ணுவாரு’!.. ஸ்மித்துக்கு இருக்கும் ‘விநோத’ பழக்கம்.. சீக்ரெட் உடைத்த வார்னர்..!

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினர். அப்போது ஆஸ்திரேலியா-இந்தியா இடையே விமான சேவை நிறுத்தப்பட்டிருந்ததால், ஆஸ்திரேலிய வீரர்கள அனைவரும் மாலத்தீவில் தங்கியிருந்தனர். பின்னர் அங்கிருந்து சில தினங்களுக்கு அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பினர்.

David Warner on Steve Smith's weird bat testing habit

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, சக வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இருக்கும் விநோத பழக்கம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘நாங்கள் தங்கும் ஓட்டலில், எங்கள் அறைக்கு மேலுள்ள அறையில் ஸ்டீவன் ஸ்மித் தங்கினால், அன்று நிச்சயம் எங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. அதற்கு அவருடைய விசித்திரமான பழக்கமே காரணம். இரவு தூங்கும் முன்பு அவர் தனது பேட்டை சோதித்து பார்ப்பார். பேட்டின் எடையை சரி பார்ப்பதற்கும், போட்டியில் எந்த பேட்டை வைத்து விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர் அப்படி ஒரு சோதனையை அறையில் செய்து பார்ப்பார்.

David Warner on Steve Smith's weird bat testing habit

முதலில் அந்த சத்தத்தைக் கேட்டபோது, அறையை சுத்தம் செய்யும் நபர்தான் இப்படி செய்கிறார் என நினைத்தோம். ஆனால் அதன்பின் தான் ஸ்டீவ் ஸ்மித் மேல் அறையில் தங்கி இருக்கிறார் என்பது தெரியவந்தது’ என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

David Warner on Steve Smith's weird bat testing habit

முன்னதாக தனது வீட்டில் கண்களை துணியால் கட்டிக்கொண்டு சரியான பேட்டை தேர்ந்தெடுக்கும் பரிசோதனையில் ஸ்டீவ் ஸ்மித் ஈடுப்பட்டார். இதனை அவரது மனைவி டேனி வில்ஸ் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாகவும், ஸ்டீவன் ஸ்மித் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாகவும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்