RRR Others USA

"முதல்ல நீங்க 'Prove' பண்ணுங்க".. எச்சரித்த நடுவர்.. வாக்குவாதத்தில் வார்னர்.. எப்படி இருந்த மனுஷன்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பல ஆண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

"முதல்ல நீங்க 'Prove' பண்ணுங்க".. எச்சரித்த நடுவர்.. வாக்குவாதத்தில் வார்னர்.. எப்படி இருந்த மனுஷன்..?

இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி ஆடவுள்ளது. முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இவை இரண்டுமே டிராவில் முடிந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளது.

கடைசி நாள் போட்டி

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 391 ரன்களும், பாகிஸ்தான் அணி 268 ரன்களும் எடுத்திருந்தது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்திருந்தது. இதனால், பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

யாரு ஜெயிக்க போறாங்க?

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 73 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது. கடைசி நாளில், அந்த அணியின் வெற்றிக்கு 278 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், யார் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு, தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எச்சரித்த நடுவர்கள்

இதனிடையே, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது, தொடக்க வீரர் டேவிட் வார்னர் நடுவருடன் சண்டை போட்ட வீடியோ ஒன்று, தற்போது அதிகம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பிட்ச்சில் ஓடி வரும் போது, சில முக்கியமான பாதைகளை வார்னர் சேதப்படுத்தியதாக போட்டி நடுவர்கள், அவருக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

கடுப்பான வார்னர்

இதனை முற்றிலும் மறுத்த வார்னர், போட்டி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிட்ச்சினை நீங்கள் சேதப்படுத்தக் கூடாது, கவனமாக ஓட வேண்டும் என நடுவர் கூற, பிறகு நான் எப்படி பேட்டிங் செய்து விட்டு ஓட வேண்டும் என வார்னர் கேட்கிறார். இதற்கு நடுவரும் பதிலளிக்க, உடனடியாக வார்னரோ, "நான் எப்படி ஆட வேண்டும் என்பது பற்றி, விதிமுறை புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை எனக்கு காட்டுங்கள். அதுவரை நான் ஆடத் தொடங்க மாட்டேன்" எனக் கூறி முறையிட்டார்.

 

அது மட்டுமில்லாமல், பாகிஸ்தான் வீரர்களுடனும் இதுகுறித்து வார்னர் பேசியதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொடரில், மிகவும் ஜாலியாக ஆடி வரும் வார்னர், நடுவரின் எச்சரிக்கைக்கு பிறகு, சற்று ஆக்ரோஷம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DAVID WARNER, AUS VS PAK, THIRD TEST, UMPIRE, FIGHT, டேவிட் வார்னர்

மற்ற செய்திகள்