தெலுங்கு மொழியில் வார்னர் சொன்ன 'அந்த' வார்த்தை!.. மனைவி கொடுத்த மாஸ் ரிப்ளை!.. இணையத்தை தெறிக்கவிடும் காதல் ஜோடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குவாரண்டைன் நேரத்தில் வார்னரும் அவரது மனைவியும் செய்யும் சேட்டைகள் ரசிகர்களுக்கு வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு மொழியில் வார்னர் சொன்ன 'அந்த' வார்த்தை!.. மனைவி கொடுத்த மாஸ் ரிப்ளை!.. இணையத்தை தெறிக்கவிடும் காதல் ஜோடி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த மே16ம் தேதி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் குவாரண்டைனில் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த டிக்டாக் வீடியோக்களால் இந்தியர்களின் மனதை வென்றார்.

இந்திய திரைப்படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் அவர் குடும்பத்துடன் இன்ஸ்டா ரீல்களாக செய்து பதிவிட்டு வந்தது ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்றிருந்ததால் அவரின் இன்ஸ்டா வீடியோக்களை ரசிகர்கள் மிஸ் செய்தனர். 

ஐபிஎல் முடிந்துவிட்டதால் தற்போது மீண்டும் தனது குறும்புத்தனமான சேட்டையை தொடங்கி விட்டார். சமீபத்தில் தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு ரீல்ஸ் செய்திருந்த அவர், அடுத்ததாக ராமுலோ ராமுலா பாடலுக்கு வீடியோ செய்தார். இந்நிலையில், தற்போது தெலுங்கு ஹீரோவாகவே வார்னர் மாறிவிட்டார்.

டேவிட் வார்னர் அவரது மனைவியை திருமண உடையில் தூக்கி நிற்பது போல அனிமேஷன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அதில் "நான் நின்னே பிரேமிஸ்துனானு" என தெலுங்கில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். 

இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் வார்னரின் மனைவியும் ரியாக்ட் செய்துள்ளார். வார்னரின் பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள கேண்டிஸ் வார்னர், இதயங்களை பதிவிட்டுள்ளார். வார்னருக்கும் அவரது மனைவிக்கும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

டேவிட் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மே 16ம் தேதி மாலத்தீவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றனர். அங்கு சிட்னியில் உள்ள ஒரு ஹோட்டலில் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, குவாரண்டைன் காலம் முடிவடையாததால் இன்னும் சில நாட்களுக்கு வார்னரின் சேட்டைகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்