"இனிமே 'மேட்ச்' நடக்குறப்போ 'அந்த' விஷயத்த பண்ணமாட்டேன்... எனக்கு தான் வயசாயிடுச்சுல்ல ... " அட நம்ம 'வார்னரா' இப்டி சொன்னது?!!!.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளை விளையாடவுள்ளது.

"இனிமே 'மேட்ச்' நடக்குறப்போ 'அந்த' விஷயத்த பண்ணமாட்டேன்... எனக்கு தான் வயசாயிடுச்சுல்ல ... " அட நம்ம 'வார்னரா' இப்டி சொன்னது?!!!.."

இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் 27 ஆம் தேதி அன்று சிட்னியில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் ஆஸ்திரேலியாவில் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் இதுகுறித்து கூறும் போது, 'இப்போது நான் 34 வயதை எட்டியுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் எனக்கான இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால் இனிமேல் வார்த்தை போரில் (Sledging) ஈடுபட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.david warner about sledging in match against india

அப்படி வார்த்தை போரில் ஈடுபடாமல் இருக்க கடந்த காலங்களில் கற்றுக் கொண்டு வந்துள்ளேன். சில நேரம் எதிரணியினர் வார்த்தை போரில் ஈடுபட்டாலும் அதற்கு வார்த்தைகளால் பதில் கூறாமல் எனது பேட் மூலம் அதிக ரன்கள் குவித்து பதில் சொல்ல முடிவு செய்துள்ளேன். ஸ்லெட்ஜிங் செய்வது என்பது அணியினரிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கியமாகும். இதன் காரணமாக, சற்று கண்ணியத்துடன் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.david warner about sledging in match against india

ஓரு தந்தையாக இருப்பதன் மூலம் பொறுமையை கடைபிடிக்க கற்றுக் கொண்டுள்ளேன். அது களத்திலும் எனக்கு உதவி செய்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் ரோஹித் இல்லாதது மிகப் பெரிய பிரச்சனை தான். ஆனால், அதனை கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக கையாளும்' என வார்னர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்