மேட்ச 'கேப்டன் கூல்' மாதிரி பினிஷ் பண்ணனும்...! 'அவர் சேஸிங் பண்றதெல்லாம் வேற லெவல்...' - தோனியை follow பண்ணும் ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்கா அணி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியை போல சிறந்த பினிஷராக வேண்டும் என தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

மேட்ச 'கேப்டன் கூல்' மாதிரி பினிஷ் பண்ணனும்...! 'அவர் சேஸிங் பண்றதெல்லாம் வேற லெவல்...' - தோனியை follow பண்ணும் ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயர்...!

தென் ஆப்பிரிக்கா அணியின் இடது கை அதிரடி பேட்ஸ்மேன் ஆன டேவிட் மில்லர் கடந்த 8 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போதைய ஐ.பி.எல்  2020 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியைக் குறித்து கூறியுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

டேவிட் மில்லர் எம்.எஸ். டோனி குறித்து கூறும் போது, 'சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி அவரின் வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே  வழியில் நானும் செல்ல விரும்புகிறேன். தோனி எப்போதும் எதையும் கூலாகவே ஹேண்டில் செய்வார், அவர் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்றே நினைப்பேன். தோனி தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து அதற்கு ஏற்றார் போலவே செயல்படுகிறார், நானும் அதை செய்ய வேண்டும், கண்டிப்பாக செய்வேன்.

அதுமட்டுமில்லாமல் அவர் அவரை சித்திரிக்கும் விதம், மிகவும் சிறந்தது. அவரைப் போன்று நானும் விரும்பி செயல்படுவேன். அதே எனர்ஜியை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். முக்கியமாக கேப்டன் கூல் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை விட, அவரின் சில சேஸிங்கை கண்டு வியப்படைகிறேன். அவரைப் போன்று போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்