இதுவே வேற ஒரு 'கேம்'னா... 'க்ரவுண்ட விட்டே வெளியேத்தியிருப்பாங்க...' 'கோலிய 3-வது டெஸ்ட்ல விளையாட விடாதீங்க...' - முன்னாள் கிரிக்கெட் வீரர் கடும் கண்டனம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலியை மூன்றாவது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீச, ஜோ ரூட் பந்தை எதிர்கொண்டார்.
பந்து ஜோ ரூட் கால் பேடில் பட்டு சென்றது. இந்திய வீரர்கள் LBW கேட்டனர். அம்பையர் விக்கெட் கொடுக்க மறுத்து விட்டார்.
ஆனால் REPLAY-யில் அம்பயர்ஸ் ஹால் என வந்தது. இதனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் நிதின் மேனனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விராட் கோலியின் இந்த செயலை விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட், விராட் கோலியை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து டேவிட் லாயிட் தெரிவிக்கையில் ‘‘விராட் கோலிக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லையா? இதனால் நான் மிகவும் விரக்தியடைகிறேன். கிரிக்கெட் மிகவும் பழமையானது. ஒரு அணியின் கேப்டன் நடுவரை விமர்சனம், கேலி, துன்புறுத்த, மிரட்ட அனுமதிக்கப்படுகிறார். தொடர்ந்து அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.
இதுமட்டும் கிரிக்கெட் அல்லாமல் வேறொரு போட்டியாக இருந்தால், விராட் கோலி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார். கோலியை மூன்றாவது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்