எப்பவுமே இதே Dish-ஆ ஆல் ஓவர் Wifesம் இந்த விஷயத்துல ஒரே ட்ரிக்ஸ் தான் Use பன்றாங்க போல.. புலம்பும் ஃபுட் பால் வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டன் நகரில் பிறந்த பெக்காம், 1993ஆம் ஆண்டு மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.
பின்னர் 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசிய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அந்த அணிக்காக 115 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பெக்காம், 2009ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2003ஆம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய அவர், 2004ஆம் ஆண்டு ரியல்மாட்ரிட் அணியில் இணைந்தார். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு கால்பந்து விளையாட்டு போட்டிகளில் ஒய்வு பெற்றார்.
டேவிட் பெக்காம் கடந்த 1999 ம் ஆண்டு பாடகர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் விக்டோரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, புரூக்ளின்(22), ரோமியோ(19), குரூஸ்(16), மற்றும் ஹார்பர் செவன்(10) என்ற நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இதனிடையே, பிரபல தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட டேவிட் பெக்காம் தனது மனைவி விக்டோரியாவின் உணவு பழக்கம் குறித்து கூறியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மனைவி விக்டோரியா கடந்த 25 ஆண்டுகளாக ஒரே வகையான உணவை மட்டுமே சாப்பிட்டு வருவதாக தெரிவித்தார். உடல்நலனில் மிகவும் அக்கறை உடையவரான விக்டோரியா ஒரே உணவை சாப்பிடுகிறார்.
வீட்டில் விதவிதமான சமையல் சமைத்து வைத்திருந்தாலும், விக்டோரியா வேக வைத்த மீன் மற்றும் வேக வைத்த காய்கறிகளை மட்டுமே 25 ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறார். நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒரே ஒரு முறை மட்டும் மற்ற உணவை சாப்பிட்டுள்ளார். தனது மகள் ஹார்பர் வயிற்றில் இருந்தபோது என் தட்டில் இருந்ததை எடுத்து சாப்பிட்டது அதிசயமாக இருந்தது. அந்த இரவு என் வாழ்நாளில் மறக்க முடியாத இரவு. அந்த உணவு என்ன என்பது எனக்கு சரியாக நினைவு இல்லை. ஆனால், அந்த உணவை அவர் அதற்கு முன்வு சாப்பிட்டதே இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.
டேவிட் பெக்காம் கால்பந்து விளையாட்டு தவிர யுனிசெப் மற்றும் மலேரியா நோய் தடுப்பு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டார். ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார். 2018-ம் ஆண்டுக்கான உயரிய யு.இ.எப்.ஏ.வின் தலைருக்கான விருதினையும் வென்றார்.
மற்ற செய்திகள்