கோலிய கிண்டல் பண்ணிட்டு.. தினேஷ் கார்த்திக்கிடம் போன தனிஷ்.. தமிழ்லயே சம்பவம் பண்ணி அனுப்பிட்டாரு😅

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பைத் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கோலிய கிண்டல் பண்ணிட்டு.. தினேஷ் கார்த்திக்கிடம் போன தனிஷ்.. தமிழ்லயே சம்பவம் பண்ணி அனுப்பிட்டாரு😅

Also Read | Video : சூர்யகுமாரை பங்கமா கலாய்ச்ச ரோஹித்.. "அதுலயும் ஒரு போஸ் கொடுத்தாரு பாருங்க"!!

தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22 ஆம் தேதியன்று தொடங்குகிறது.

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கும் ஏற்கனவே முன்னேறி இருந்தது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மோதி இருந்த இந்திய அணி, த்ரில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி மழை காரணமாகவும் கைவிடப்பட்டிருந்தது. மேலும், தங்களின் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியையும் இந்திய அணி வரும் அக்டோபர் 23 ஆம் தேதியன்று சந்திக்கவுள்ளது.

danish sait fun video with virat kohli dinesh karthik hardik

கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீக் சுற்றில் இந்திய அணி மோதி இருந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறவும் வழி செய்திருந்தது. இதனால், இந்த முறை நிச்சயம் இந்திய அணி திட்டம் வகுத்து களமிறங்கும் என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர். அதே போல, இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில், பிரபல காமெடியன் தனிஷ் சைட் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அணியில் உள்ள வீரர்களை ரோஸ்ட் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டு பண்ணி உள்ளது.

danish sait fun video with virat kohli dinesh karthik hardik

விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஷாஹீன் அப்ரிடி, ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ள வீடியோவில் அனைவரிடமும் பத்திரிக்கையாளர் போல ஹிந்தியில் கேள்வி கேட்கிறார் தனிஷ் சைட். அதுவும் அவர்களை Fun ஆக கிண்டல் செய்யும் வகையில் கேள்விகள் இடம்பெற்றுள்ளது.

விராட் கோலி அடிக்கடி ஆப் ஸ்டம்ப் வெளியே வரும் பந்துகளை அடித்து அடிக்கடி அவுட்டாகி இருந்தது அதிகம் விமர்சனத்தை சந்தித்திருந்தது. இதை குறிப்பிட்டு அவரிடம் ஜாலியாக கேள்வி கேட்ட தனிஷ், ஆஸ்திரேலியாவில் ஆப் சைடு ஸ்டம்புக்கு வெளியே கேள்வி கேட்டால் தொடர்ந்து பேட்டிங் செய்வீர்களா அல்லது வெளியேறி போவீர்களா என கேட்கிறார்.

அதே போல, ரிஷப் பந்த்திடம் (Rishabh Pant) அவரது பெயரில் உள்ள Pant-ஐ வைத்து, சிறு வயதில் Shorts ஆக இருந்த நீங்கள், இப்போது Pant ஆக மாறி விட்டீர்களா என்றும் கேட்கிறார்.

danish sait fun video with virat kohli dinesh karthik hardik

இப்படி அனைவரிடமும் அவர்களை ஜாலியாக கிண்டல் செய்யும் வகையிலான கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கும் தனிஷ், கடைசியில் தினேஷ் கார்த்திக்கிடமும் ஏதோ ஒரு கேள்வியை கேட்கிறார். ஆனால் அதற்கு பதில் சொல்லாத தினேஷ் கார்த்திக், "டேய் போடா" என ஜாலியாக தமிழில் கூறி விட்டு செல்கிறார்.

சமீபத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி இருந்த விஷயம் அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, மீண்டும் ஒரு முறை என தமிழில் பேசியது தொடர்பான வீடியோ, அதிகம் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Danish sait (@danishsait)

Also Read | 41 வருஷம் கழிச்சு ஏலம் போன ஒரு துண்டு 'Cake'.. "சார்லஸ் - டயானா கல்யாணத்துல செஞ்சதாம்"!!.. சுவாரஸ்ய பின்னணி!!

CRICKET, DANISH SAIT, VIRAT KOHLI, DINESH KARTHIK, HARDIK PANDYA, DANISH SAIT FUN VIDEO WITH VIRAT KOHLI

மற்ற செய்திகள்