மேட்ச் தோத்ததுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க.. RCB ஆல்ரவுண்டரின் மனைவியை சீண்டிய ரசிகர்கள்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்ததை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் டேனியல் கிறிஸ்டியனின் மனைவியை ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேட்ச் தோத்ததுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க.. RCB ஆல்ரவுண்டரின் மனைவியை சீண்டிய ரசிகர்கள்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!

ஐபிஎல் (IPL) தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 138 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை சுனில் நரேன் 4 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

Daniel Christian wife abused on Instagram after RCB Loss in Eliminator

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Daniel Christian wife abused on Instagram after RCB Loss in Eliminator

இந்த நிலையில், பெங்களூரு அணி தோல்வியடைந்ததற்ககாக அந்த அணியின் ஆல்வுண்டர் டேனியல் கிறிஸ்டியனை (Daniel Christian) ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு காரணம், டேனியல் கிறிஸ்டியன் வீசிய ஒரு ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Daniel Christian wife abused on Instagram after RCB Loss in Eliminator

மேலும் கடைசி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. ஆனால் டேனியல் கிறிஸ்டியன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி சென்றது. இதனால் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற்றுவிட்டது.

Daniel Christian wife abused on Instagram after RCB Loss in Eliminator

இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் சிலர் டேனியல் கிறிஸ்டியன் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டு வந்தனர். இதற்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டேனியல் கிறிஸ்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Daniel Christian wife abused on Instagram after RCB Loss in Eliminator

அதில், ‘என் மனைவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சென்று பாருங்கள். எங்களுக்கு இன்று மோசமான போட்டிதான், ஆனால் இது ஒரு விளையாட்டு. தயவுசெய்து அவளை தொந்தரவு செய்யாதீர்கள்’ என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

மற்ற செய்திகள்