அடுத்த மேட்ச் ‘சிஎஸ்கே’ கூட.. அதுக்குள்ள ‘இப்டியா’ நடக்கணும்.. டெல்லி அணிக்கு வந்த புதிய ‘சிக்கல்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

அடுத்த மேட்ச் ‘சிஎஸ்கே’ கூட.. அதுக்குள்ள ‘இப்டியா’ நடக்கணும்.. டெல்லி அணிக்கு வந்த புதிய ‘சிக்கல்’!

டெல்லி அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. அதேபோல் சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கடினமாகியுள்ளது. அதிகமான இளம்வீரர்களை கொண்ட டெல்லி அணி இந்த வருட ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

CSKvDC: Delhi captain Shreyas Iyer and Rishabh Pant injury

இந்த நிலையில் டெல்லி அணியில் முக்கிய வீரர்கள் தொடர்ந்து காயத்தால் விலகுவது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக அமித் மிஸ்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார். இதனைத் தொடர்ந்து வேகபந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.

CSKvDC: Delhi captain Shreyas Iyer and Rishabh Pant injury

இதன்பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயமடைந்து ஓய்வில் உள்ளார். தற்போது டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னைக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வருட ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

CSKvDC: Delhi captain Shreyas Iyer and Rishabh Pant injury

முன்னதாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் டெல்லியை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. இந்தநிலையில் டெல்லி அணியின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து வருவது சிஎஸ்கேவுக்கு ஒருவகையில் சாதகமாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்