‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’.. பயிற்சிக்கு திரும்பிய சிஎஸ்கே ‘சிங்கக்குட்டி’.. செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இரண்டு முறை மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம்வீரர் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’.. பயிற்சிக்கு திரும்பிய சிஎஸ்கே ‘சிங்கக்குட்டி’.. செம குஷியில் ரசிகர்கள்..!

கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அப்போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

கடந்த மாதமே துபாய் சென்ற சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கொரோனாவில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பினார். அதேபோல் மற்றொரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனாலும் கூடுதலாக அவருக்கு இரண்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட 2 சோதனை முடிவுகளும் நெகட்டிவ் என வந்தது. இதனை அடுத்து அவர் வலைப்பயிற்சிக்கு திரும்பியுள்ளார். இதனை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

The first thing you wanna see on a Monday morning. Look who's back! 😍 #Ruturaj #WhistlePodu #Yellove pic.twitter.com/GXYIMs1OBx

சென்னை அணியில் இளம் வீரர்கள் குறைவு என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 22 வயதான சாம் குர்ரனை முதல் போட்டியில் சென்னை அணி ஆட வைத்தது. அப்போட்டியில் 6 பந்துகளில் 18 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சாம் குர்ரன் அமைந்தார். இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிந்து மற்றொரு இளம்வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்பியுள்ளது சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.CSK young player back in camp after negative Covid-19 tests

மற்ற செய்திகள்