சிஎஸ்கே ‘இதமட்டும்’ இன்னைக்கு பண்ணா.. மும்பைக்கு அடிக்கும் அந்த ‘ஜாக்பாட்’.. நடக்குமா அந்த ‘மிராக்கிள்’?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.

சிஎஸ்கே ‘இதமட்டும்’ இன்னைக்கு பண்ணா.. மும்பைக்கு அடிக்கும் அந்த ‘ஜாக்பாட்’.. நடக்குமா அந்த ‘மிராக்கிள்’?

நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த ஐபிஎல் சீசனில் 8-வது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. இதனால் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் +1.186 நெட் ரன்ரேட் வைத்துள்ளது. இந்த ஒரு காரணத்தால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது. ஆனாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

CSK win today will assure MI get a spot in the playoffs

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் தலா 14 ஆட்டங்களில் விளையாடுகின்றன. இதில் குறைந்தது 9 வெற்றிகளைப் பெற்ற அணியே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. இதனால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டால் மும்பை அணி 9 வெற்றிகளைப் பெறுவதற்கு முன்பே முதல் அணியாக பிளே ஆஃப்புக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை கொல்கத்தா வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் ரேஷில் மும்பையுடன் சேர்ந்துகொள்ளும்.

CSK win today will assure MI get a spot in the playoffs

மும்பைக்குப் பின்னால் 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூர், டெல்லி ஆகிய இரு அணிகள். வரும் நவம்பர் 2ம் தேதி மோதுகின்றன. இதனால் இந்த இரு அணிகளில் ஓர் அணியால் மட்டுமே அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும்.  பஞ்சாப் அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும் மும்பைக்குப் பாதிப்பு நேராது. இதனால் மும்பை அணி பிளே ஆஃப் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

CSK win today will assure MI get a spot in the playoffs

மும்பை அணி 9-வது வெற்றியைப் பெறும் முன்பே இன்று சிஎஸ்கே வெற்றி பெற்றால் பிளே ஆஃப் தகுதி என்ற ‘ஜாக்பாட்டை’ மும்பை அணியால் பெற முடியும். இல்லையென்றால் இனி உள்ள இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாக வேண்டிய சூழ்நிலைக்கு மும்பை அணி சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்