Video: 5 வயசுல என் ‘அம்மாகிட்ட’ அத சொன்னேன்.. ‘3 வருஷம் நீங்க காட்டுன அன்பு..!’.. உருகிய வாட்சன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசிய வீடியோ ஒன்றை சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,‘ஐந்து வயதில் டெஸ்ட் போட்டி ஒன்றை பார்த்துவிட்டு நான் ஆஸ்திரேலியாவுக்காக கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று என் தாயிடம் கூறியதில் தொடங்கியது எனது இந்த பயணம். தற்போது நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்.
கடந்த மூன்று வருடங்களாக என்னிடம் அன்பு காட்டிய சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடியதுதான் எனது கடைசி போட்டி, இதுதான் சரியான நேரம் என்று எனக்கு தோன்றியது’ என வாட்சன் தெரிவித்தார்.
"I'm just so grateful, the last three years have been one of the highlights of my career." Watto's farewell message to the super fans. #ThankYouWattoMan 🦁💛@ShaneRWatson33 #WhistlePodu #Yellove pic.twitter.com/NYppMFbOJM
— Chennai Super Kings (@ChennaiIPL) November 3, 2020
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன், கடந்த 2015ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின்னர் கடந்த 2016ம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்திருந்தார். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் வாட்சன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் வருட ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஸ்கே அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் சிஸ்கே தோல்வியை தழுவியது.
சிஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் கால்களில் ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை வாட்சன் பெற்றார். குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்