"எனக்காக மும்பையும் (MI) சென்னையும் (CSK) சண்டை போட்டது தான் என் வாழ்க்கைல BEST MOMENT!" - இளம் வீரரின் வைரல் பேச்சு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், குறிப்பாக இரண்டு வெற்றிகரமான உரிமையாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் தனக்காக ஏலத்தில் கடும் போட்டி இட்டது வாழ்வில் சிறந்த தருணம் என இளம் வீரர் கூறியுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “U-19 உலகக் கோப்பையை வெல்வது நம் அனைவருக்கும் ஒரு நல்ல தருணம், இதை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் போற்றுவோம்.
“எல்லோரும் ஐபிஎல்லில் விளையாட விரும்புகிறார்கள், ஏலத்தில் எனது பெயர் வந்த நேரத்தில், நான் உற்சாகமாக இருந்த தருணம் அது. MI மற்றும் CSK ஏலத்தில் எனக்காக சண்டையிட்டபோது, அது எனக்கு ஒரு சிறந்த தருணம்". என கூறியுள்ளார்.
இறுதியில், ஏலத்தில் இவரை வென்றது CSK தான், இது இவருக்கும் இவரது மறைந்த தந்தைக்கும் மிகவும் பிடித்த அணி CSK தான். எம்எஸ் தோனியின் கீழ் விளையாடுவது என்பது பலருக்கும் ஒரு கனவாகும், அந்தகனவு இப்போது நிஜமாக போகிறது.
மேலும், "நான் எப்போதும் எம்எஸ் தோனியின் தீவிர ரசிகன், என் தந்தைக்கு சிஎஸ்கே மிகவும் பிடிக்கும், அவர் தோனியை மிகவும் நேசித்தார், நான் சிஎஸ்கேக்காக விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்பினார். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ”
"CSK க்காக விளையாடுவதற்கான வாய்ப்பு எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும், மனதில் தோன்றுவதைக் கற்றுக்கொள்வதிலும், கேட்பதிலும் ஆர்வமாக இருப்பதாகவும், தனக்கு முன்னால் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் ஹங்கர்கேகர் கூறியுள்ளார். இளம் வயதினருக்கு ஸ்டார்ஸ்ட்ராக் வருவது சகஜம், ஆனால் அவர்கள் அதில் இருந்து மீண்டு நடப்பு தருணத்தில் இருக்க வேண்டும்"
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைப் போல் விளையாட வேண்டும் என்பது எனது மனநிலை, மிக வேகமாக பந்து வீச விரும்புகிறேன், பெரிய சிக்ஸர்கள் அடிக்க விரும்புகிறேன். நான் எனது பலத்திற்கு ஏற்ப விளையாடி வருகிறேன்” என்று ஹங்கர்கேகர் ஐபிஎல் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறியுள்ளார்.
அவரு கூட எப்படிங்க கம்பேர் பண்ணுவீங்க? எலான் மஸ்க் ஷேர் செய்த மீம்.. வெடித்த சர்ச்சையால் உடனே டெலீட்
மற்ற செய்திகள்