அவுட் கொடுத்த ‘அம்பயர்’.. வேகமாக வந்து ‘ரிவ்யூ’ கேட்க சொன்ன டுபிளிசிஸ்.. கடைசியில் நடந்த ‘ட்விஸ்ட்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அந்த அணியின் தீபக் ஹூடா 62 ரன்கள் எடுத்தார். சென்னை அணியை பொருத்தவரை லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாகீர் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் டு பிளிசிஸ் 48 ரன்களில் அவுட்டாக அடுத்த வந்த அம்பட்டி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் அவர் 49 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அசத்துனார். இதனால் 18.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில் இப்போட்டியின் 8-வது ஓவரை ரவி பிஸ்னாய் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் தூக்கி அடிக்க, அதை மந்தீப் சிங் கேட்ச் பிடித்தார். இதை அம்பயர் அவுட் கொடுத்ததும் நடந்து சென்ற ருதுராஜை அழைத்து டு பிளிசிஸ் ரிவ்யூ கேட்க சொன்னார்.
ரிவ்யூவில் பார்த்தபோது மந்தீப் கேட்சை பிடித்துவிட்டு, பின்னர் தரையில் வைத்ததுபோல இருந்தது. இதனால் மூன்றாம் அம்பயர் இதை நாட் அவுட் என அறிவித்தார். இதில் அதிர்ப்தி அடைந்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளேவும் கோபமடைந்தார். ஒருவேளை ருதுராஜ் அவுட்டாகி இருந்தால் போட்டியின் முடிவுகள் சற்று மாறியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
Mandy paaji da vadhiya effort, but the third umpire's decision doesn't go our way. 🙌🏻
Tough one to swallow 🥺#SaddaPunjab #IPL2020 #KXIP
— Kings XI Punjab (@lionsdenkxip) November 1, 2020
மற்ற செய்திகள்