“கையெழுத்து போடலைன்னா ஒரு மேட்ச்ல கூட விளையாட முடியாதுன்னு சொன்னாங்க”.. மிரட்டி வெளியேற்றிய MI அணி.. CSK வீரர் பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணியில் இருந்து மிரட்டி மற்றொரு அணிக்கு தன்னை மாற்றியதாக சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக ராபின் உத்தப்பா விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்த இவரை டிராஸ்பர் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியது. இதனை அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் சிஎஸ்கே அணி இவரை எடுத்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடபோது வழுக்கட்டாயமாக மற்றொரு மாற்றியதாக ராபின் உத்தப்பா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், ‘ஐபிஎல் தொடரில் முதன்முதலில் அணி மாற்றப்பட்ட வீரர் நான் தான். இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏனெனில் என் நம்பிக்கை, விசுவாசம் அனைத்தும் மும்பை அணி மீது இருந்தது. ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பு இந்த சம்பவம் நடந்தது. நான் ஆவணங்களில் கையெழுத்திட மறுத்தேன்.
அப்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் சில பிரச்சனைகளை சந்தித்தேன். ஆர்சிபி அணியுடனான முதல் சீசனில், உண்மையில் நான் மனச்சோர்வின் உச்சத்தில் இருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒருவர், அவர் பெயரை நான் கூற விரும்பவில்லை. நான் ட்ரான்ஸ்பர் பேப்பரில் கையெழுத்திடவில்லை என்றால், ஒரு போட்டியில் கூட ப்ளேயிங் லெவனில் இடம்பெறமாட்டாய் எனக் மிரட்டினர்’ என ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
ஐபிஎல் 2008 தொடரில் மும்பை இந்தியன்ஸ் ராபின் உத்தப்பாவை வாங்கியது. இதற்கு அடுத்த ஆண்டே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்டார். அந்த ஆண்டு பெங்களூரு அணி இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்