"எங்களை வேற யாரையும் கலாய்க்க விடமாட்டோம்... நாங்களே பங்கமா கலாய்ப்போம்..." வேற 'லெவல்' ட்வீட் போட்ட 'சிஎஸ்கே'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் வைத்து நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.

"எங்களை வேற யாரையும் கலாய்க்க விடமாட்டோம்... நாங்களே பங்கமா கலாய்ப்போம்..." வேற 'லெவல்' ட்வீட் போட்ட 'சிஎஸ்கே'!!

முன்னதாக, அனைத்து ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பது பற்றியும், எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது என்பது குறித்த பட்டியலையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், 8 ஐபிஎல் அணிகள் வெளியேற்றிய வீரர்களையும், புதிதாக சில வீரர்களையும் இணைத்து ஐபிஎல் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து, நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதில், இதற்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணியின் சார்பில் உட்காந்திருந்தவர்களில் யாரோ ஒருவர் மிக்சரை சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, 'Aaramikalaangala! 🎵🎶 18th Feb 2021 - #Yellove family Time with some Namma ooru Snacks to add some Singams to the Lion Up! #IPL2021 💛🦁' என்ற கேப்சன் இடம்பெறச் செய்துள்ளனர்.

 

இதற்கு முன்பு நடைபெற்றிருந்த ஏலத்தின் போது பல வீரர்கள் ஏலத்தில் வரும் போது, அமைதியாக இருந்த சிஎஸ்கே நிர்வாகிகள், வயதான வீரர்களையே பெரும்பாலும் அணியில் எடுத்தனர். துடிப்புடன் கூடிய இளம் வீரர்களை அணியில் எடுக்காமல், ஏலத்தின் போது சென்னை அணி மிக்சர் சாப்பிட்டுக் (அமைதியாக இருந்தனர்) கொண்டிருந்ததாகவும் ரசிகர்கள் மீம்ஸ்களை வைரலாக்கினர்.

இந்த முறையாவது இளம் வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சென்னை அணியே சொந்தமாக தங்களை கலாய்த்து இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ஒரு படி மேலே சென்ற சென்னை அணியின் ட்விட்டர் அட்மின், 'இந்த முறை ஏலத்தின் நடுவே சாப்பிட சில நல்ல நொறுக்கு தீனிகளை பரிந்துரை செய்யுங்கள்' என்றும் நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் மீதிருக்கும் விமர்சனத்தை வைத்தே திருப்பி அடிப்பது போன்ற பதிவை சிஎஸ்கே பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்களிடம் இது அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்