'ஏற்கனவே பங்கமா செய்வாங்க'... 'இனிமேல் என்னவெல்லாம் நடக்க போகுதோ'... அதிருப்தியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது.

'ஏற்கனவே பங்கமா செய்வாங்க'... 'இனிமேல் என்னவெல்லாம் நடக்க போகுதோ'... அதிருப்தியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது குறைந்து வரும் நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளதால், அதனை முன்னிட்டு 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும், எந்த வீரர்களை வெளியேற்றப் போகிறார்கள் என்பதையும் அறிவிக்க கடந்த 20 ஆம் தேதி வரை பிசிசிஐ நேரம் கொடுத்திருந்தது.

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், மோனு சிங் ஆகிய வீரர்களை வெளியேற்றி, மற்ற வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து இந்திய வீரரான ராபின் உத்தப்பாவை வாங்கியுள்ளது.

csk trade robin uthappa from rajasthan royals for ipl 2021

 

வாட்சன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால் அவருக்கு பதிலாக உத்தப்பாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க திட்டம் தீட்டியிருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே சென்னை அணியில் வயதான வீரர்கள் அதிகமுள்ள நிலையில், தற்போது ராபின் உத்தப்பாவையும் அணியில் இணைத்துள்ளனர்.

இந்த முறையாவது அதிக இளம் வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

 

மற்ற செய்திகள்