விரைவில் நடைபெறப் போகும் 'ஐபிஎல்' ஏலம்??... "சென்னை 'டீம்' இவர தான் மொத ஆளா தூக்கப் போறாங்க..." வெளியாகியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது.

விரைவில் நடைபெறப் போகும் 'ஐபிஎல்' ஏலம்??... "சென்னை 'டீம்' இவர தான் மொத ஆளா தூக்கப் போறாங்க..." வெளியாகியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'!!!

இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டில் இன்னும் புதிதாக இரு அணிகள் இணைவது குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதற்காக எட்டு அணிகளும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்றும், எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறது என்பது குறித்தும் ஐபிஎல் நிர்வாகத்திடம் அறிவிக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Csk to release kedar jadhav ahead of ipl 2021 sources says

இதனையடுத்து, கேதார் ஜாதவை முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவிக்கப் போவதாக தற்போது தகவல்கள்  வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக களமிறங்கிய கேதார் ஜாதவ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவரது ஆட்டம் கடுமையான விமர்சனத்திற்குள் ஆக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல், 35 வயதான ஜாதவ், பெரிய அளவில் ஃபிட்டாக இல்லை என்றும் அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.Csk to release kedar jadhav ahead of ipl 2021 sources says

கேதார் ஜாதவைத் தொட்ர்ந்து ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா ஆகியோரையும் சென்னை அணி இந்த சீசனுக்கு முன்னர் விடுவிக்க ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்