கடைசி ‘ரெண்டு’ நிமிஷத்துலதான் தோனி அத பண்ணுவார்.. ‘2019 பைனல் மேட்ச்லையும் அப்டிதான் செஞ்சிருப்பாரு’.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன ‘சீக்ரெட்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையில் விளையாடிய அனுபவம் குறித்து பார்தீவ் பட்டேல் பகிர்ந்துள்ளார்.

கடைசி ‘ரெண்டு’ நிமிஷத்துலதான் தோனி அத பண்ணுவார்.. ‘2019 பைனல் மேட்ச்லையும் அப்டிதான் செஞ்சிருப்பாரு’.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன ‘சீக்ரெட்’!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேடஸ்மேனான பார்தீவ் பட்டேல், கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். அப்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியுடன் விளையாடிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,‘தோனி கடைசி இரண்டு நிமிடங்களில்தான் அணியின் மீட்டிங்கை நடத்துவார். 2008ம் ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் கூட கடைசி இரண்டு நிமிடங்களில்தான் மீட்டிங் நடத்தினார். அவர் 2019ம் ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் அப்படிதான் நடத்தியிருப்பார் என உறுதியாக சொல்வேன். தோனிக்கு எந்த வீரரிடம் இருந்து என்ன வேண்டும் என தெளிவாக தெரியும்’ என பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய பார்தீவ் பட்டேல் 302 ரன்களை குவித்தார். 2010 ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடிய அவர், அதன்பின்னர் கொச்சி டஸ்கர்ஸ், டெக்கான் சார்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளின் சார்பாக விளையாடியுள்ளார். ஆனாலும் தோனியின் மீது அதே மதிப்பை தான் வைத்துள்ளதாக பார்தீவ் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்