“என்னது ‘அவரு’ இந்த தடவ ஆடலையா??” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்!!'... அதிர்ச்சியில் ‘ஐ.பி.எல்’ ரசிகர்கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

“என்னது ‘அவரு’ இந்த தடவ ஆடலையா??” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்!!'... அதிர்ச்சியில் ‘ஐ.பி.எல்’ ரசிகர்கள்!!!

இதனைத் தொடர்ந்து, ஐ.பி.எல் விளையாடும் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட, அணியின் மூத்த அதிகாரி, சமூக ஊடகக் குழு என மொத்தம் 12 பேருக்கு பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்த தகவல் ஐ.பி.எல் ரசிகர்களுக்கு இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மற்ற சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது, மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல் தொடரில் விளையாடப் போவதில்லை என அணியின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா திரும்பவுள்ளதால், அவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து விளக்கவுள்ளதாக அணியின் சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

 

மற்ற செய்திகள்