Video : "எத்தன நாளாச்சுய்யா இவர இப்டி பாத்து!.." 'சிஎஸ்கே' வீரர் வெளியிட்ட 'வீடியோ'... "இந்த தடவ மிஸ்ஸே ஆகாது..." கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்காக, சில அணிகள் தற்போதே பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, வீரர்கள் அம்பத்தி ராயுடு, ஹரி நிஷாந்த், ஜெகதீசன், கெய்க்வாட், சாய் கிஷோர் உள்ளிட்ட சில வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சென்னை அணி, தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறது.
கடந்த சீசனுக்கு முன்பு வரை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததில்லை. ஆனால், துபாயில் கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் தொடரில், லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்திருந்தது. இதனால், இந்த முறை பழைய ஃபார்முக்கு திரும்புவதில் சென்னை அணி முனைப்புடன் உள்ளது.
மேலும், இந்தாண்டுக்கான ஏலத்தில், மொயீன் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி எடுத்தள்ளது. இவை அனைத்தையும் விட பெரிதாக, ரசிகர்களால் சின்ன 'தல' என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கடந்த சீசனில், தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் ரெய்னா கிளம்பிய நிலையில், அவர் இல்லாமல் போனது தான் சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்ததாக ரசிகர்கள் கருதினர்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான தொடரில் அவரை மஞ்சள் நிற உடையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐபிஎல் போட்டிகளுக்காக, தான் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 'வரவிருக்கும் சீசனுக்காக எல்லாம் தயாராகி விட்டது' என அவர் கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு, ரெய்னாவை ஐபிஎல் பயிற்சிக்காக பார்த்ததை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
அதே போல, இந்த முறை சென்னை அணி கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வரும் நிலையில், ரெய்னா வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்