'ஐபிஎல்லுக்கு தயாராகும் ரெய்னா?!!'... 'வெளியான திடீர் அறிவிப்பால்'... 'எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வெளியேறிய ரெய்னா, வரும் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

'ஐபிஎல்லுக்கு தயாராகும் ரெய்னா?!!'... 'வெளியான திடீர் அறிவிப்பால்'... 'எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று கோப்பையை தக்க வைத்தது. அதேநேரம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணி பிளே ஆப்பிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த தொடருக்கு முன்னதாகவே சென்னை அணியின் முக்கியமான வீரரான ரெய்னா தொடரில் இருந்து திடீரென்று வெளியேறியதும் அந்த அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ரெய்னா தன் சொந்த காரணங்களுக்காக வெளியேறுவதாக சொன்னபோதும், சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் தொடரில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

CSK Suresh Raina Confirms Participation In IPL 2021

இந்நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள 2021 ஐபிஎல் தொடரில் ரெய்னா விளையாடுவது தற்போது உறுதியாகி உள்ளது. 2021 ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வேன் என உறுதி அளித்துள்ள ரெய்னா, அதற்காக சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியிலும் விளையாட உள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் உத்திரபிரதேச அணிக்கு கேப்டனாக செயல்படப்போகும் ரெய்னா, இதற்குமுன் 2015-16ஆம் ஆண்டு இதே அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

CSK Suresh Raina Confirms Participation In IPL 2021

அதன்பின் அவர் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள உள்ள நிலையில், அவர் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் தொடர்வாரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. முன்னதாக சிஎஸ்கேவின் கோர் அணியை மொத்தமாக மாற்ற போவதாக தோனி தெரிவித்துள்ள நிலையில்தான் ரெய்னா மீண்டும் ஐபிஎல்லில் விளையாடப்போவதாக கூறியுள்ளார். ஏற்கெனவே ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டதையடுத்து ஐபிஎல்லுக்கு திரும்பும் அவர் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்து விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மற்ற செய்திகள்