அதான் 'ரெய்னா' கெளம்பிட்டாருல்ல,,.. இனிமே யாரு உங்க டீமோட 'vice' கேப்டன்??,,.. 'சி.எஸ்.கே' அணியின் அசத்தல் 'பதில்' - வைரல் 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் முழுவதுமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து ஐ.பி.எல் அணிகளும் துபாய் சென்றுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தில் கொரோனா பரிசோதனை முடிவில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அவர் பங்கேற்கப் போவதில்லை என அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா இந்தாண்டு போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதால் அணியின் துணை கேப்டன் யார் என நபர் ஒருவர் ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, “Wise captain irukke bayam yen?” என பதிலளித்துள்ளார்.
அதாவது, அணியில் அறிவாளியான கேப்டன் ஒருவர் இருக்கும் நிலையில், நாம் எதற்கு பயப்பட வேண்டும் என அணியின் கேப்டன் தோனியை குறிப்பிட்டு பதிலளித்துள்ளனர். சிஎஸ்கே அணியின் இந்த பதில், ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
Wise captain irukke bayam yen? 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) September 2, 2020
மற்ற செய்திகள்