"அன்னைக்கி 117 கிலோ இருந்தேன்.. ஆனா, இன்னைக்கி சீனே வேற".. CSK இளம் வீரரின் 'Motivational' குட்டி ஸ்டோரி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்றிருந்த போட்டியில், லக்னோ அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ், 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு தொடரில் தான் முதல் முறையாக களமிறங்கி இருந்தது. வந்த வேகத்திலேயே பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தி உள்ளது குஜராத் அணி.
பிளே ஆப் சுற்றின் மற்ற 3 இடங்களுக்காக, மும்பை அணியைத் தவிர 8 அணிகளுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் வாய்ப்பு உள்ளது.
மங்கல் வாய்ப்புடன் சிஎஸ்கே..
இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 11 போட்டிகளில் விளையாடி, நான்கில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் வென்றாலும் கூட, மற்ற சில போட்டிகளின் வெற்றி முடிவை வைத்து தான், சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு உறுதியாகும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில், தொடர் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்ற கட்டாயமும் சிஎஸ்கேவுக்கு உள்ளது.
நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, எப்படியாவது அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சென்னை அணியில் இடம்பெற்று, ஜொலித்து வரும் இளம் வீரர் ஒருவர், தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
அசத்தும் சூழல் தீக்ஷனா
21 வயதே ஆகும் இலங்கை சுழற்பந்து வீரர் மஹீஸ் தீக்ஷனா, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சிஎஸ்கே அணிக்காக நடப்பு ஆண்டில் ஆடி வருகிறார். கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பை போட்டியில், இலங்கை அணிக்காக களமிறங்கி இருந்த தீக்ஷனாவுக்கு ஒரு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வரும் அவர், 8 போட்டிகள் விளையாடி, 12 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உள்ளார்.
117 கிலோ இருந்தேன்..
நிச்சயம் அடுத்தடுத்த சீசன்களில், சென்னை அணியின் வெற்றிக்கு தீக்ஷனா பெரிய பங்கு வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தன் கிரிக்கெட் பயணத்தில் தான் சந்தித்த சவால்கள் பற்றி, தீக்ஷனா மனம் திறந்துள்ளார். "U 19 ஆடிய சமயத்தில், நான் 117 கிலோ வரை இருந்தேன். இதனால், அதிகம் கடினமாக உழைத்து, உடல் எடையை குறைக்க முடிவு செய்தேன். 2020 ஆம் ஆண்டில், அனைத்தும் குறைந்து, பிட்னஸை சரி செய்தேன். உடலுக்காக, நிறைய கடினமாக உழைப்பினை நான் மேற்கொண்டேன்.
வாட்டர் பாயா இருக்க வெச்சாங்க..
2017 - 18 காலக்கட்டத்தில், U 19 அணியில் நான் இருந்த போது, ஃபிட்னஸ் தேர்வில் நான் சில முறை தோல்வி அடைந்ததால், விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. 2019-இல் வாட்டர் பாயாகவும் 10 போட்டிகளில் செயல்பட்டு வந்தேன். நாம் தோல்வி அடைந்தால், வாட்டர் பாட்டில்களை தான் சுமக்க விடுவார்கள் என்பதை மனதில் கொண்டு, என் மீது நம்பிக்கை வைத்து, பின்னர் கடினமாக உழைத்தேன். 2022 ஆம் ஆண்டில் நான் இங்கு இருக்கிறேன்.
2021 ஆம் ஆண்டில், எனது அணிக்காக டி 20 உலக கோப்பையிலும் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு சீக்கிரம், உலக கோப்பை போட்டியில் ஆடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை" என மஹீஸ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்