'CSK வெற்றி கொண்டாட்ட ஃபோட்டோவில்...' சாம் கர்ரன் 'எப்படி' வந்தார்?? 'நெட்டிசன்கள் சரமாரி கேள்வி...' - வைரலாகும் புதிய 'புகைப்படத்தின்' பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் செய்துள்ள தில்லுமுல்லு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் சீசன் கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதோடு, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐ.பி.எல் 2021 சாம்பியன்ஸ் கோப்பையை தட்டி சென்றது.
இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் சென்னை அணியும் மோதி கொண்டத்தில் கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2019ஆம் சீசனில் முதல் சுற்றிலேயே படுதோல்வி அடைந்து வெளியேறிய சென்னை அணி இந்த சீசனில் பீனிக்ஸ் பறவையை போல மொத்தமாக சேர்த்து வைத்து அனைத்துக்கும் பதிலடி கொடுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் சி.எஸ்.கே வீரர்கள், அணி நிர்வாகத்தினர் கையில் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அந்த போட்டோவில் தான் ஒரு தில்லாலங்கடி வேலை நடந்துள்ளது.
அந்த வெற்றி கொண்டாட்ட போட்டோவில் சி.எஸ்.கே வீரர்களுடன் சாம் கர்ரனும் இருந்துள்ளார். ஆனால் சாம் கர்ரன் அந்த நாளில் அங்கு இல்லவே இல்லையாம். அதோடு சி.எஸ்.கே வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் சாம் கர்ரன் கலந்து கொள்ளவில்லை.
ஏனெனில் இறுதிபோட்டி நடக்கும் முன்னரே சாம் கர்ரன் தனது தாய்நாடான இங்கிலாந்து சென்று விட்டார். இதனால் அவர் துபாயில் சி.எஸ்.கே வீரர்களுடன் போஸ் கொடுப்பதுபோல் சாம் கரனின் ரசிகர்களோ (அ) சிஎஸ்கே ரசிகர்களோ போட்டோஷாப் மூலம் மாற்றி வைத்துள்ள விஷயமும் வெளிவந்துள்ளது.
மற்ற செய்திகள்