சிஎஸ்கே-வின் அனைத்து ப்ளான்களையும் புரட்டிப்போட்ட ருத்துராஜ்!.. அவர் நல்லா ஸ்கோர் பண்ணிட்டாரு!.. ஆனா, அதுக்கு பின்னாடி வரப்போகும் சிக்கல்... இவ்ளோ பெருசா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுருத்துராஜின் அதிரடி ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணியில் பல மூத்த வீரர்களின் இடம் காலியாக போகிறது என்கிறார்கள்.
2020 ஐபிஎல் தொடர் ஒரு வழியாக சிஎஸ்கே அணிக்கு முடிவிற்கு வந்துள்ளது. தொடக்கத்தில் வரிசையாக தோல்விகளை தழுவி வந்த சிஎஸ்கே கடைசி கட்டத்தில் வரிசையாக வெற்றிகளை குவித்தது.
அதிலும் கடைசி மூன்று போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங் எல்லாமே சிறப்பாக அமைந்தது. சிஎஸ்கே அணியில் சொதப்பி வந்த ஓப்பனிங் பேட்டிங், கடைசி மூன்று போட்டியில் நன்றாக இருந்தது.
மேலும், சிஎஸ்கே அணிக்காக களமிறங்கி வரும் ருத்துராஜ் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த மூன்று போட்டிகளில் இவர் வரிசையாக அரை சதம் அடித்துள்ளார்.
அடுத்தடுத்து அரை சதம் மூலம் தோனியை தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதிலும் சிஎஸ்கே அணிக்காக அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக வரிசையாக மூன்று முறை மேன் ஆப் தி மேட்ச் விருது வாங்கிய ஒரே வீரர் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இதனால் தற்போது ருத்துராஜுக்கு ஆதரவு கூடியுள்ளது.
இவர் கடந்த மூன்று போட்டியிலும் ஓப்பனிங் இறங்கி சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்துவிட்டார். இதனால் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய ஜெகதீசனுக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை.
இதன் காரணமாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தமிழக வீரர் ஜெகதீசன் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்த சீசனில் மொத்தம் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்த ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் இவர் டக் அவுட் ஆனார். எப்படியாவது இவர் தன்னை நிரூபிக்கலாம் என்று நினைத்தார். ஆனால் ருத்துராஜின் அதிரடி பினிஷிங் காரணமாக மூன்று போட்டியிலும் இவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அடுத்த சீசனில் இவர் சிஎஸ்கேவிற்கு ஆடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ருத்துராஜ் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட சிஎஸ்கே அணி நிர்வாகம் மூத்த வீரர்கள் பலரை அணியில் இருந்து தூக்கும் முடிவில் இருக்கிறது. வாட்சன், ஜாதவ் போன்றவர்களை தூக்கும் முடிவில் அணி நிர்வாகம் இருக்கிறது.
ருத்துராஜ் போல இளமையான வீரர்தான் அணிக்கு தேவை. அவரை போல இளம் வீரர்களை எடுக்க வேண்டும். இனியும் மூத்த வீரர்களை நம்ப கூடாது என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரூத்துராஜின் அதிரடி ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணியில் பல மூத்த வீரர்களின் இடம் காலியாக போகிறது என்கிறார்கள்.
மற்ற செய்திகள்