"இனிமே அப்டி இருக்காது".. Retire ஆன பொல்லார்ட்.. CSK போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
Also Read | 250 பெண்களை வரன் பார்க்க குவிந்த 11 ஆயிரம் பேர்.. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன சம்பவம்!!
இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போதில் இருந்தே தீவிரமாக நடந்து வருகிறது.
டிசம்பர் மாதம், கேரள மாநிலம் கொச்சியில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, மொத்தமுள்ள 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜாவை மீண்டும் தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதே வேளையில், பிராவோ உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்திருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் சில வீரர்களை விடுவித்திருந்த நிலையில், அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார் பொல்லார்ட். கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கால் பதித்த பொல்லார்ட், 13 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி உள்ளார்.
வேறு எந்த அணியிலும் ஆடாமல் இருந்த பொல்லார்ட், மும்பை அணிக்காக எக்கச்சக்க போட்டிகளில் அதிரடியாக ஆடி தங்கள் பக்கம் சாதகமாக போட்டியின் முடிவை மாற்றி அமைப்பதில் அவருக்கு நிகர் யாருமே இல்லை. ஐந்து முறை மும்பை அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ள நிலையில், அதை எட்ட உதவிய பொல்லார்ட்டின் பங்கும் மிகப் பெரியது.
தனது ஓய்வு குறித்து பொல்லார்ட் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் அவர் இனி செயல்பட உள்ளார். இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் சில உருக்கமான பதிவுகளை பகிர்ந்திருந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பொல்லார்ட்டின் ஓய்வு குறித்த ட்வீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்துள்ள கமெண்ட், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி என்றால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கும்.
இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் என்பதால், அனைத்து அணிகளின் ரசிகர்களும் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஐபிஎல் தொடரின் "El Clasico" போட்டி என்றும் இது கருதப்படும். அப்படி ஒரு சூழலில், பொல்லார்ட் ஓய்வனை அறிவித்துள்ள நிலையில், இந்த அறிக்கையின் கீழ் சென்னை அணி கமெண்ட் செய்துள்ளது.
அதில், "நீங்கள் மிடிலில் இல்லாமல் IPL Clasico இனி அதே போல இருக்காது. நன்றி Polly" என பொல்லார்ட் மற்றும் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கமெண்ட் செய்துள்ளது.
Also Read | நண்பரின் திருமணத்திற்கு.. சேலையில் வந்த அமெரிக்கர்கள்..😍 பட்டையை கிளப்பிட்டாங்க!!
மற்ற செய்திகள்