VIDEO: அப்படியே ‘பழைய’ தோனியை பார்த்த மாதிரி இருக்கு.. ‘என்னங்க இப்படி பொளக்குறாரு’.. சிஎஸ்கே வெளியிட்ட ‘வெறித்தனமான’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபயிற்சி ஆட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் தோனியின் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற உள்ளது. நாளை (19.09.2021) நடைபெற உள்ள முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கேப்டன் தோனி, அம்பட்டி ராயுடு, சென்னை அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பல முக்கிய போட்டிகளில் கேதர் ஜாதவின் மோசமான ஆட்டம் ரசிகர்களை கோபமடைய வைத்தது.
கேப்டன் தோனியும் 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்களே எடுத்திருந்தார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 37 ரன்கள் மட்டுமே தோனி எடுத்துள்ளார். அதனால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய வீடியோவை சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் கேப்டன் தோனி சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்க விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதிரடி காட்டும் பழைய தோனியை பார்ப்பது போலவே உள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.
All arealayum Thala...🥳#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/Zu85aNrRQj
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 18, 2021
அதனால் நடைபெற உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விமர்சனங்களுக்கு தோனி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்