சைலண்டா நடந்து முடிஞ்ச பிரபல CSK வீரரின் திருமணம்.. வரவேற்பில் பங்கேற்கும் தோனி மற்றும் கோலி.. வைரலாகும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும், இந்திய கிரிக்கெட் அணி வீரருமான தீபக் சஹார் நேற்று (ஜூன் 1) தனது தோழியை கரம்பிடித்தார்.
தீபக் சஹார்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் இதுவரையில் 7 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான பவுலராக அறியப்படும் தீபக் சஹார் காயம் காரணமாக 15வது சீசன் முழுமையும் ஆடவில்லை. ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சஹார்.
காதல்
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சாஹர் ஜெயா பரத்வாஜூக்கு காதலை வெளிப்படுத்தினார். இதற்கு ஜெயா ஓகே சொல்லவும், கைதட்டால் அரங்கமே அதிர்ந்தது. இந்த வீடியோ அப்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
டெல்லியை சேர்ந்த ஜெயா டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் காதல் அரும்பியதை அடுத்து, நேற்று (ஜூன் 1) இருவரும் திருமணம் செய்துகொண்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமண நடைபெற்றிருக்கிறது.
வரவேற்பு
இந்நிலையில், இன்று நடைபெற்ற இருக்கும் திருமண வரவேற்பிற்கு தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபங்களுக்கு சஹார் - ஜெயா இணை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆக்ரா ஃபதேஹாபாத் சாலையில் உள்ள பிரபல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இன்று மாலை திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. ஆக்ராவின் புகழ்பெற்ற சுதிர் இசைக்குழுவினர் சாஹரின் திருமண விழாவுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
தீபக் சஹார் தனது திருமண புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பகிர அது தற்போது வைரலாகி இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் சஹாருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மற்ற செய்திகள்