"Hijack பண்ணப்போ நம்ம பையன் ஒருத்தன்.." 'தளபதி' விஜய்யாக மாறிய 'தல' தோனி.. "இனி IPL ஃபுல்லா Beast Mode தான்.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில், தோனி அடித்த அடி இன்று வரை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
அடுத்த போட்டி ஆரம்பம் ஆகி நடைபெற்று வந்தாலும், இணையத்தில் தற்போது வரை தோனி பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
பல நாட்களுக்கு பிறகு, தோனியின் பினிஷிங் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், 'Vintage' தோனியை பார்த்த உற்சாகத்தில் மயங்கி தான் போயுள்ளனர்.
பிரபலங்களின் பாராட்டு..
மும்பை அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நான்கு பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்படவே, உனத்கட் வீசிய பந்தில் 6, 4, 2, 4 என அடித்த தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை சென்னை அணிக்காக பெற்று கொடுத்துள்ளார். இருந்தும், புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9 ஆவது இடத்தில் நீடிக்கிறது சிஎஸ்கே. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமில்லாமல், மற்ற துறையைச் சேர்ந்த பிரபலங்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தோனியின் பினிஷிங்கை பாராட்டி வருகின்றனர்.
கடந்த சில ஐபிஎல் சீசன்களில் பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்து வந்த தோனி, இந்த முறை அரை சதத்துடன் தொடங்கி இருந்தார். தொடர்ந்து, தற்போதும் பழைய தோனி போல, ஆட்டத்தை அவர் முடித்துக் கொடுத்துள்ள நிலையில், இனி வரும் போட்டிகளில் தோனியின் அதிரடியை பார்க்க, ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
பீஸ்ட் விஜய் போல மாறிய தல தோனி
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், 'பீஸ்ட்' திரைப்படம், கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதற்கு முன்பாக, படத்தின் டிரைலர் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
மேலும், செல்வராகவன் வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கும் இந்த டிரைலரின் வசனங்கள், அந்த சமயத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. இதனை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியுடன் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் மாதிரி தல தோனி வரும் இந்த வீடியோ, தோனி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்