"சீக்கிரமா உங்கள சந்திக்கிறேன்.." 'சென்னை' வீரர் போட்ட 'ட்வீட்'.. "போடுறா வெடி'ய.." செம கொண்டாட்டத்தில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.
அடுத்ததாக, சென்னை அணி தங்களது மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை சந்திக்கவுள்ளது. இதனிடையே, சிஎஸ்கே வீரர் ஒருவர் போட்ட ட்வீட் காரணமாக, அந்த அணியின் ரசிகர்கள் வேற லெவலில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, சென்னை அணியில் கடந்த சீசனில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் (Hazlewood), தனிப்பட்ட காரணங்களால் இந்த சீசனில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என ஐபிஎல் தொடர் ஆரம்பமவாதற்கு முன்னர் அறிவித்திருந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் திடீரென விலகியதால், சிஎஸ்கே ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஹேசல்வுட்டிற்கு மாற்று வீரராக எந்த வீரரை சென்னை அணி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஹேசல்வுட் விலகிய அடுத்த சில தினங்களில், மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டார்ஃப்பை (jason behrendorff) சிஎஸ்கே அணி, மாற்று வீரராக அறிவித்திருந்தது.
மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடியுள்ள பெஹ்ரன்டிராஃப், அடுத்ததாக சிஎஸ்கே அணியில் ஆடவுள்ளார். அதுவுமில்லாமல், இவரை மாற்று வீரராக சிஎஸ்கே அறிவித்ததும், அவர் எப்போது சிஎஸ்கே அணியில் இணைவார் என்ற ரசிகர்கள் காத்திருந்தனர்.
தொடர்ந்து, சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ட்வீட் ஒன்றை, பெஹ்ரன்டார்ஃப் பதிவிட்டுள்ளார். அதில், தான் விமானத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த பெஹ்ரன்டார்ஃப், 'விரைவில் உங்களை சந்திக்கிறேன் சிஎஸ்கே. ஐபிஎல் தொடருக்காக காத்திருக்க முடியவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
See you soon @ChennaiIPL can’t wait for @IPL pic.twitter.com/tdowHqeIqa
— Jason Behrendorff (@JDorff5) April 18, 2021
இதனால், அவர் விரைவில் சென்னை அணியுடன் இணைவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், சென்னை ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். பந்து வீச்சில் சற்று பலம் குறைவாக காணப்படும் சென்னை அணிக்கு, பெஹ்ரன்டார்ஃப்பின் வருகை, நிச்சயம் பலம் சேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், கொரோனா விதிமுறைகள் காரணமாக, ராஜஸ்தான் அணிக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில், அவர் களமிறங்குவதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றே தெரிகிறது.
மற்ற செய்திகள்