RRR Others USA

‘தல’ தோனி கையை யாராவது கவனச்சீங்களா?.. ஒருவேளை அது உண்மையா இருக்குமோ?.. வைரலாகும் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பயிற்சி ஆட்டத்தின் போது சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணிந்திருந்த கிளவுஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘தல’ தோனி கையை யாராவது கவனச்சீங்களா?.. ஒருவேளை அது உண்மையா இருக்குமோ?.. வைரலாகும் போட்டோ..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நேற்று முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இது முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்தது வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஈடுபட்ட தோனி, ஆரஞ்சு நிற கை கிளவுஸ் அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனிவிலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வினை அறிவித்தார். இதனை அடுத்து அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, அதுதான் அவரது கடைசி ஐபிஎல் தொடர் என செய்திகள் வெளியாகின. ஆனால் ‘நிச்சயமாக இல்லை’ (Definitely Not) என தோனி பதிலளித்தார்.

CSK MS Dhoni wearing orange colour gloves in IPL 2022

இதனை அடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கோப்பையை வென்று அசத்தியது. தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அணியில் ஒரு வீரராக தோனி விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் சென்டிமெண்டாக அவர் முதன்முதலில் அணிந்த கிளவுஸை அணிந்து விளையாடி வருவதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்