Instagram-ல் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்ததா CSK? திடீரென வெடித்த புது சர்ச்சை.. CEO கொடுத்த விளக்கம் என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜடேஜாவை அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | “இது நம்ம நாட்டுக்குள்ளையும் நுழைஞ்சிருச்சு”.. பரபரப்பு தகவலை வெளியிட்ட வடகொரிய அதிபர்..!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு ஆல்ரவுண்டர் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவர் தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. அதனால் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து தோனியே மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதனால் ஜடேஜா திடீரென விலகியது காயம் காரணமாக? அல்லது, சிஎஸ்கே அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமா? என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படி உள்ள சூழலில் சிஎஸ்கே அணியின் சிஇஓ Indian Express ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது ஜடேஜா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எந்த சமூக வலைதளத்தையும் நான் பின்தொடரவில்லை. எனக்கு அதைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. இதுதொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டு விளக்கம் அளிக்கிறேன். ஆனால் சிஎஸ்கே அணியின் வருங்கால திட்டத்தில் நிச்சயம் ஜடேஜா இருப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால்தான் அடுத்து நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவருக்கு ஓய்வு தேவை. அதனால் மீதம் உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் அவர் வீடு திரும்புகிறார்’ என காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்