கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க..! எங்களுக்கே ‘புடி புடி’யா.. நேரம் பார்த்து ஆர்சிபியை வச்சு செஞ்ச சிஎஸ்கே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கலாய்த்து போட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க..! எங்களுக்கே ‘புடி புடி’யா.. நேரம் பார்த்து ஆர்சிபியை வச்சு செஞ்ச சிஎஸ்கே..!

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. கடைசியாக சில போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.

CSK hilariously troll RCB with popular Pudi Pudi tag

ஆனால் கடந்த ஐபிஎல் சீசனில் மோசமாக விளையாடிய பெங்களூர் அணி, இந்த சீசனில் ஆரம்பமே சிறப்பாக விளையாடி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை மாறி, மாறி பிடித்து அசத்தியது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியுடனான முதல் லீக் போட்டியில் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

CSK hilariously troll RCB with popular Pudi Pudi tag

அதனால் பெங்களூர் அணி ரசிகைகள் சிலர் சிஎஸ்கே அணியை கலாய்த்து பாட்டுப் பாடி இணையத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் "சிஎஸ்கேக்கு புடி புடி" என்ற வார்த்தை வைரலானது. புடி புடி என்றால் கன்னடத்தில் ‘தூள், தூளாக’ நொறுக்கி விட்டோம் என அர்த்தம். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளாகினர். நமக்கு ஒரு சந்தர்ப்பம் வரும் என காத்திருந்தனர்.

CSK hilariously troll RCB with popular Pudi Pudi tag

அப்போது லீக் சுற்றின் இரண்டாவது சந்திப்பில் பெங்களூர் அணியை சென்னை அணி வீழ்த்தியது. அப்போட்டியில் சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுது. அந்தப் போட்டியின் முடிவில் சிஎஸ்கே ரசிகர்கள் பெங்களூர் அணியை கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

CSK hilariously troll RCB with popular Pudi Pudi tag

இதனை அடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூர் அணி முன்னேறியது. ஆனால் எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியிடம் மோசமான தோல்வி அடைந்து தொடரில் இருந்தே வெளியேறியது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகைகள் பதிவிட்ட ‘புடி புடி’ வீடியோவை கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்தனர்.

இந்தநிலையில் சிஎஸ்கே அணி தன் ட்விட்டர் பக்கத்தில், இளம்வீரர் ருதுராஜ் கெயிக்வாட் கேட்ச் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘புடி புடி’ என பதிவிட்டு பெங்களூரு அணி ரசிகர்களை மறைமுகமாக கலாய்த்துள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்