‘இப்ப வரை சென்னை தான் இதுல முதல் இடத்துல இருக்கு’.. முதல் வெற்றியிலேயே ‘வேறலெவல்’ சாதனை படைத்த CSK..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஐபிபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு தொடக்கமே சரியாக அமையவில்லை. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இப்படி தோல்வி பெறுவது இதுதான் முதல்முறை. இந்த சூழலில் நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை சிஎஸ்கே அணி 59.84 என்ற உச்சபட்ச வெற்றி சதவீதத்தை தக்க வைத்து வருகிறது.
இதுவரை 200 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, 118 போட்டிகளில் வெற்றியும், 80 முறை தோல்வியும் அடைந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 221 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 125 போட்டிகளில் வெற்றியும், 92 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அந்த அணியின் வெற்றி சதவீதம் 57.46 என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக முதல் வெற்றி.. “இதை அவங்களுக்கு டெடிக்கேட் பண்றேன்”.. ஜடேஜா உருக்கம்..!
மற்ற செய்திகள்