ஐபிஎல் அறிவிப்பு வந்ததும் எமோஷனல் ஆன சிஎஸ்கே ரசிகர்கள்.. ட்ரெண்ட் ஆகும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் டி 20 லீக் தொடர் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உலக அளவில் உள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | வழுக்கையால் பறிபோன வேலை?.. ஷாக்ல இருந்த மனுஷனுக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டிய லட்ச ரூபாய்!!
கடந்த டிசம்பர் மாதம், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றிருந்தது. இதில் மொத்தமுள்ள 10 அணிகளுமே ஏராளமான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியில் சொந்தமாக்கி இருந்தனர். ஒரு சில வீரர்கள் புதிதாக இணைந்துள்ளதும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் இறுதி போட்டி, மே 28 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் இந்த சீசனுக்கான அறிமுக போட்டி, மார்ச் 31 ஆம் தேதியன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. அதே போல, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், க்ரூப் A வில் இடம்பெற்றுள்ளது. சென்னை, பெங்களூர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் க்ரூப் B ல் இடம்பெற்றுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் மொத்தமுள்ள 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் அட்டவணை வெளியான சூழலில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும், அதே வேளையில் எமோஷனலிலும் உள்ளனர்.
கடந்த ஆண்டு, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஒருசில குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் தான் நடைபெற்றிருந்தது. அதற்கு முன்பு, 2021 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் சிஎஸ்கே அணி அங்கே ஆடவில்லை. அதே போல, 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. நிச்சயம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகள் அட்டவணையின் படி, சேப்பாக்கம் மைதானத்தில் தங்களின் முதல் போட்டியை ஏப்ரல் 03 ஆம் தேதியன்று சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் லக்னோ அணியை அவர்கள் சந்திக்க உள்ளனர். சுமார் 1,427 நாட்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ஆட உள்ளது அவரது ரசிகர்களை உருக்கமடைய வைத்துள்ளது. இன்னொரு பக்கம், தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்றும் கருத்துக்கள் பரவலாக இருந்து வரும் சூழலில் அந்த விஷயம் சிஎஸ்கே ரசிகர்களை சற்று வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இதனால், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 7 போட்டிகளிலும் தோனியை கொண்டாடவும் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி தங்களின் கடைசி லீக் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 14 ஆம் தேதியன்று விளையாடுகிறது. இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அவர்கள் எதிர்கொள்ள உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்