"சும்மா 'கெத்தா' திரும்பி வருவோம்.." 'புள்ளி' விவரம் எல்லாம் போட்டு... மாஸா காத்திருக்கும் 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்... 'மெர்சல்' பண்ணுமா 'சென்னை' அணி??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தாங்கள் ஆடியுள்ள 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.

"சும்மா 'கெத்தா' திரும்பி வருவோம்.." 'புள்ளி' விவரம் எல்லாம் போட்டு... மாஸா காத்திருக்கும் 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்... 'மெர்சல்' பண்ணுமா 'சென்னை' அணி??

மீதமுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய வேண்டிய நிலையில் சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, இதுவரை சென்னை அணி கலந்து கொண்ட அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற ஏக்கத்தில் சென்னை அணி ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சிஎஸ்கே ரசிகர்களை குதூகுலப்படுத்தும் வகையில் புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது. அப்போதும், இதே போல முதல் 7 ஆட்டங்களில் 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றி கண்டிருந்தது.

 

 

மேலும், 2010 ஆம் ஆண்டில் புள்ளிப் பட்டியலில் சென்னை தற்போதுள்ள 7 ஆவது இடத்தில் தான் இருந்தது. இந்தாண்டின் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி கடைசி இடத்தில் உள்ளது போலவே, 2010 ஆம் ஆண்டும் பஞ்சாப் அணி கடைசி இடத்தில் இருந்தது. 2010 மற்றும் 2020 என இரண்டு ஆண்டுகளிலும் பாதி லீக் சுற்று முடிவடைந்த போது மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், பாதி லீக் சுற்றுகள் முடிவில் 6 புள்ளிகளுடன் இரண்டு அணிகள் புள்ளிப் பட்டியலில் இருந்தது. 

 

இதனையடுத்து, 2010 ஆம் ஆண்டைப் போலவே சென்னை அணி மீண்டு வந்து கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதே வேளையில், மற்ற ஐபிஎல் அணி ரசிகர்கள், இந்த முறையுள்ள அணியை வைத்துக் கொண்டு சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்