"அடிபொளி சாரே!!".. அடுத்த சீசனுக்கும் மாஸான 'பிளான்' ரெடி!.. 'சிஎஸ்கே' வைத்த குறி?!.. எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்த நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4 ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது.

"அடிபொளி சாரே!!".. அடுத்த சீசனுக்கும் மாஸான 'பிளான்' ரெடி!.. 'சிஎஸ்கே' வைத்த குறி?!.. எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!

இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பற்றி தற்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம், லக்னோ மற்றும் அகமதாபாத் என இரு புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது தான். அது மட்டுமில்லாமல், தற்போதுள்ள 8 ஐபிஎல் அணிகளும், பிசிசிஐ விதிகளுக்குட்பட்டு, தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் மாத இறுதியில் வெளியிட்டிருந்தது.

இதில், நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, தோனி, ஜடேஜா, ருத்துராஜ் மற்றும் மொயீன் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. மொத்தம் 10 அணிகள் அடுத்த ஐபிஎல் சீசனில் பங்கு பெறவுள்ளதால்,  போட்டிகளுக்கு முன்பாக நடைபெறவுள்ள ஏலத்தில் எந்தெந்த அணிகள், எந்தெந்த வீரர்களை எடுக்கும் என்பது பற்றியான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. பல இளம் வீரர்கள் மற்றும் சிறந்த வீரர்களை சேர்த்துக் கொள்ள அனைத்து அணிகளுக்கு இடையே நிச்சயம் கடும் போட்டி நிலவும்.

அதிலும் குறிப்பாக, பலம் வாய்ந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கத் திட்டமிடும் என்பது பற்றி, தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆவல் எழுந்துள்ளது. இந்நிலையில், நான்கு வீரர்களை அணியில் எடுத்துக் கொள்ள, சிஎஸ்கே அதிகம் முனைப்பு காட்டும் என தகவல் ஒன்று வெளியாகி, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிய இந்திய வீரர் ஷிகர் தவான் (Shikhar Dhawan), 587 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடம் பிடித்திருந்தார். இவரை சென்னை அணி இந்த ஏலத்தில் குறி வைக்கலாம் என கூறப்படுகிறது. இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், கடந்த இரண்டு சீசன்களாக, சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம், இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார்.

சென்னை அணியின் மற்றொரு தொடக்க வீரரான டுபிளெஸ்ஸியை அணியில் இருந்து நீக்கியதால், அதற்கு மாற்று வீரராக தவானை எடுக்க முயற்சிக்கலாம் என தகவல்கள் கூறுகிறது. இதைத் தவிர்த்து, 3 தமிழக வீரர்களை சென்னை அணி குறி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) மற்றும் ஷாருக்கான் (Shahrukhkhan) தான் அந்த மூன்று பேர்.

இதில், ஏற்கனவே சென்னை அணிக்காக ஆடியுள்ள அஸ்வின், பல போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெறவும் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர் மீண்டும் சென்னை அணிக்கு வந்தால், நிச்சயம் அணிக்கு அதிக பலம் சேர்க்கும். தான் மீண்டும் சென்னை அணியில் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு, சமீபத்தில் பதிலளித்த அஸ்வின், சென்னை அணிக்காக ஆட தான் அதிக விருப்பத்துடன் இருப்பதாகவும், ஆனால் நான் ஆடுவதை ஏலம் தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

வாஷிங்டன் சுந்தர், சமீபத்திய போட்டிகளில் மிகச் சிறப்பானதொரு ஆல் ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணிக்காக ஆடிய சுந்தர், காயம் காரணமாக முதல் பாதியுடன் வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தமிழக வீரரான ஷாருக்கான், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி இருந்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக் கூடிய இவர், சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி டிராபியை தமிழக அணி வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார். கடைசி பந்தில் தமிழக அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது, சிக்ஸர் அடித்து, கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப்பட்டார்.

இப்படி ஓப்பனிங் பேட்டிங், சுழற்பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர் மற்றும் மிடில் ஆர்டர் என அனைத்திற்கும் தலைசிறந்த வீரர்களை சென்னை அணி இலக்காக வைத்துள்ள நிலையில், அதை ஏலத்தில் நிறைவேற்றியும் காட்டினால், இந்த முறையும் பலம் வாய்ந்த அணியாக சென்னை திகழும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

MS DHONI, CSK, IPL 2022, IPL RETENTION, ASHWIN, SHAHRUKHKHAN, DHAWAN, SUNDAR, சிஎஸ்கே, தோனி, ஐபிஎல்

மற்ற செய்திகள்