IPL போட்டிகளில் இருந்து ஓய்வு.. விடைபெற்றார் CSK ஆல் ரவுண்டர் பிராவோ! சகாப்தம் முடிந்தது
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார்.
Also Read | நெஹ்ரா பின்னாடி ஒளிஞ்சு நின்ன இந்திய வீரர்.. அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்.. "சேட்ட புடிச்ச ஆளா இருப்பாரோ?
பிராவோ 2008 இல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியதிலிருந்து 2017 ஆம் ஆண்டு தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
பிராவோ, 2008 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார், பின்னர் 2011 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸால் வாங்கப்படுவதற்கு முன்பு அவர் மூன்று சீசன்களுக்கு (2008 - 2010) மும்பை அணியில் இருந்தார்.
2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் தடை செய்யப்பட்ட போது பிராவோ குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 சீசன்களுக்கு, 183 விக்கெட்டுகளை பிராவோ கைப்பற்றியுள்ளார். 161 ஆட்டங்களில் 158 இன்னிங்ஸில் 8.38 என்ற எகானமி விகிதத்துடன் பிராவோ தற்போது ஓய்வு பெறுகிறார். மேலும் 130 ஸ்டிரைக் ரேட்டில் 1560 ரன்களையும் பிராவோ எடுத்துள்ளார்.
பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 144 போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்டுகளை வீழ்த்தி 1556 ரன்கள் எடுத்துள்ளார். பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸின் பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர். 2011, 2018 மற்றும் 2021 இல் CSK அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற தொடர்களிலும், 2014 இல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் வெற்றியிலும் பிராவோ முக்கிய அங்கமாக செயல்பட்டார்.
ஐபிஎல் தொடரில் இரண்டு முறை (2013 மற்றும் 2015) அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பர்பிள் தொப்பியை வென்ற முதல் வீரர் பிராவோ என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்