அட்ரா சக்க! சும்மா ஸ்பைடர் மேன் மாதிரி பறந்து ரன் அவுட் பண்ணிய தோனி.. அவரோட விக்கெட் இவ்ளோ முக்கியமா..? அப்படி யாருப்பா அந்த ப்ளேயர்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் தோனி ரன் அவுட் செய்த பஞ்சாப் அணி வீரர் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 61 ரன்களும், ஷிகர் தவான் 53 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கேப்டன் ஜடேஜா, பிராவோ மற்றும் முகேஷ் சௌத்திரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 18 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் சிவம் துபே மட்டும் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் பானுகா ராஜபக்சேவை ரன் அவுட் செய்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இலங்கை வீரரான பானுகா ராஜபக்சேவை, நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது.
30 வயதான இவர் சரியான ஃபிட்னஸ் இல்லாததாக கூறி இலங்கை அணியில் சரியாக வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்து வந்தது. அதனால் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பானுகா ராஜபக்ச அறிவித்தார். இதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் சில நிர்வாகிகள் அவருடன் பேசியதை அடுத்து ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்.
தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருக்கும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 43 ரன்கள் (4 சிக்சர், 2 பவுண்டரி) அடித்து அந்த அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தார். இவர் சில பந்துகளே எதிர்கொண்டாலும் பவுண்டரி, சிக்சர் என விளாசி ரன் ரேட்டை அதிகப்படுத்தி விடுவார். அதனால் சிஎஸ்கே அணிக்கு இவரது விக்கெட் முக்கியமாக பார்க்கப்பட்டது. இப்போட்டியில் அவர் 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் ஒரு சிக்சர் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்