'ஆட்டத்தையே மாற்றிய 'அந்த' முக்கிய முடிவு?!!'... 'அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் குழம்பிய ரசிகர்கள்'... 'வெற்றிக்குப்பின் தோனி சொன்ன சீக்ரெட்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரனை தொடக்க வீரராக களமிறக்கியது குறித்து தோனி பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அடுத்த 7 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நிலையில், ஹைதராபாத் அணியை நேற்று எதிர்கொண்டது. கடைசி ஓவர் வரை சென்ற அந்தப் போட்டியில் சென்னை அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டதால் 20 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணியில் துவக்க வீரராக ஜகதீசன் களமிறங்குவார் எனக் கருதப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக சாம் கரன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் கண்டார். ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடிய அவர், 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 31 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கத்தை தந்தார். தோனியின் இந்த வித்தியாசமான நடவடிக்கைக்குக் காரணமென்ன என்று ரசிகர்கள் குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், போட்டி முடிந்த பிறகு தோனி மனம் திறந்துள்ளார்.
நேற்றைய போட்டி குறித்துப் பேசியுள்ள தோனி, "இந்த போட்டியில் முக்கியமானது என்றால் இரண்டு புள்ளிகள்தான், அதைப் பெற்றுவிட்டோம். டி20 கிரிக்கெட்டில் சில போட்டிகள் நமக்கு சாதகமாக இருக்காது. தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி உறுதி. இன்று நாங்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டோம். பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் துபாய் மைதானத்தில் எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ஸ்கோரை 160க்கு மேல் உயர்த்தினார்கள். பவர் பிளேவில் பௌலர்கள் அதிரடியாகப் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது" எனக் கூறியுள்ளார்.
மேலும் ஆல்-ரவுண்டர் சாம் கரனை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது பற்றி பேசியுள்ள தோனி, "சாம் கரன் எங்களுக்கு ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். உங்களுக்கு அதுபோன்ற ஆல்ரவுண்டர் தேவை. அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவரால் 45 ரன்கள் வரை அடிக்கமுடியும் என நம்பினேன். அதேபோல அவர் சிறப்பாகச் செயல்பட்டார். நாங்கள் அணியில் கூடுதல் ஸ்பின்னரை சேர்க்க விரும்பினோம். அதனால், ஜகதீசனை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்துடன் ஜகதீசன் 7 அல்லது 8ஆவது வரிசையில் களமிறங்க முடியாது என்பதும் ஒரு காரணம்.
பின்னர் தீபக் சஹார், சாம் கரனுக்கு ஓவர்கள் முன்னரே முடிக்கப்பட்டது குறித்துப் பேசியுள்ள தோனி, "தீபக் சஹார் பவர் பிளேவில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர் என்பதால் அவரை பவர் பிளேவில் அதிகம் பயன்படுத்தினோம். சார்துல் தாகூர், டுவைன் பிராவோ டெத் ஓவர்களில் நல்ல முறையில் பந்துவீசக் கூடியவர்கள் என்பதால், சாம் கரனுக்கு முன் கூட்டியே ஓவர்கள் முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்